Published : 06 May 2021 10:39 AM
Last Updated : 06 May 2021 10:39 AM
முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவருமான சவுத்ரி அஜித் சிங் விவசாயிகளின் நலனுக்காகப் பெரும் பணியாற்றிவர் எனப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.
அஜித் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி அருகே குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய உடல் நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆயினும், சிகிச்சை பலனின்றி இன்று அஜித் சிங் மரணம் அடைந்தார். இதனை அவரது மகனும் ராஷ்ட்ரிய லோக்தளக் கட்சியின் மூத்த தலைவருமான ஜெயந்த் சவுத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித் சிங் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கதத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘ராஷ்ட்ரிய லோக்தளக் கட்சியின் தலைவர் சவுத்ரி அஜித் சிங் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் நலனுக்காகப் பெரும் பணியாற்றிவர். மத்திய அரசில் அமைச்சராகப் பணியாற்றிப் பல்வேறு துறைகளைத் திறன்படக் கையாண்டவர்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT