Last Updated : 05 May, 2021 11:47 AM

 

Published : 05 May 2021 11:47 AM
Last Updated : 05 May 2021 11:47 AM

யாருக்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும்? - ஐசிஎம்ஆர் புதிய விதிமுறைகள் வெளியீடு

பிரதிநிதித்துவப் பரிசோதனை

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள், ஆரோக்கியமான உடல்நிலையோடு மாநிலத்துக்குள் பயணிப்பவர்கள் ஆர்டி பிசிஆர் பரிசோதனை எடுக்கத் தேவையில்லை என்று ஐசிஎம்ஆர் புதிய விதிகளை நேற்று வெளியிட்டது.

நாட்டில் உள்ள கரோனை வைரஸ் பரிசோதனைக் கூடங்களின் வேலைப்பளுவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த விதிகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. கரோனா வைரஸ் 2-வது அலையில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து

இதன்படி, தனிநபர் ஒருவருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், உடல்வலி, சுவை உணர்வு, வாசனை உணர்வு இழத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யலாம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் நேற்று வெளியிட்ட புதிய வழிமுறைகள் கூறுவதாவது:

இதன்படி, ரேபிட் ஆன்டி ஜென பரிசோதனையிலோ அல்லது ரேபிட் ஆன்ட்டி ஜென்பரிசோதனையில் ஒருவருக்கு பாஸிட்டிவ் வந்துவிட்டால், அவருக்கு மீண்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை.

ஒரு தனிநபர் ஏற்கெனவே ஆர்சி-பிசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டபின் மீண்டும் அவருக்கு பரிசோதனை தேவையி்ல்லை.

ஒருவர் 10 நாட்கள் வீட்டில் தனிமையில் இருந்தநிலையில் கடைசி 3 நாட்கள் காய்ச்சல் ஏதுமில்லாமல் இருந்தாலும் அவருக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை.
மருத்துவமனையில் இருந்து கரோனாசிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களுக்கும் மீண்டும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தத் தேவையில்லை.

மாநிலத்துக்குள் பயணிக்கும்போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகள் கூறியிருந்தால், அந்த விதிமுறையும் நீக்கப்படுகிறது. ஆரோக்கியமான ஒரு தனிநபருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை.

அதேசமயம், அத்தியாவசியமற்ற பயணங்கள், மாநிலத்துக்குள் பயணம் செய்யும் தனிநபர்களுக்கு அறிகுறி ஏதும் இருந்தால், அவர் பயணத்தை தவிர்க்க வேண்டும். அறிகுறிகள் இல்லாத நபர்கள் பயணம் செய்யும்போது, கண்டிப்பாக கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ரேபிட்ஆன்ட்டி ஜென் பரிசோதனையை மீண்டும் கொண்டுவரலாம். பெருநகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள், அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், சமூதாயக் கூடங்கள் உள்ளிட்டவற்றிலும் மக்களுக்கு ரேபிட் ஆன்ட்டி டெஸ்ட் நடத்தலாம். இதற்கானவசதி வாய்ப்புகளை உருவாக்கலாம்.

யாருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அவசியம்

தனிநபர் ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்து, அவருக்கு ரேபிட் ஆன்ட்டி பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் அவர் ஆர்சி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என ஐசிஎம்ஆர்தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்பட்டுள்ளதை அவசியம் தெரியப்படுத்த வேண்டும்
தனிநபர் ஒருவர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அல்லது ரேட் பரிசோதனைக்கு வரும்போது, அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா, எத்தனை தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பதை ஒரு விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவல்மூலம் எத்தனைபேர், தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியும்

இவ்வாறு ஐசிஎம்ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x