Last Updated : 02 May, 2021 03:54 PM

1  

Published : 02 May 2021 03:54 PM
Last Updated : 02 May 2021 03:54 PM

என்ன மாதிரியான போராட்டம்; மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் | கோப்புப்படம்

புதுடெல்லி


அடுத்த 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நடத்தி மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு டெல்லி முதல்வர் அரவி்ந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தி்ன் அறிவிப்பின்படி 202 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது, பாஜக 78 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள மம்தா பானர்ஜிக்கு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 140 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி 92 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

அருதிப்பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது.

மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின் பெற்றுள்ள வெற்றிக்கு டெல்லி முதல்வர் அரவி்ந்த் கேஜ்ரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ட்விட்டரில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில் “ பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றதற்காக வாழ்த்துகள் மம்தா தீதி. என்ன மாதிரியான போராட்டம். மே.வங்க மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவி்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் ட்வி்ட்டரில் விடுத்த வாழ்த்துச் செய்தியில் “ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள் உங்களுக்கு சிறப்பாக அமையவும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படவும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, ட்விட்ரில் முதல்வர் மம்தா பானர்ஜிக்குவிடுத்த வாழ்த்துச் செய்தியில், “ மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிக்காக உழைத்த ஒவ்வொருவருக்கும், முதல்வர் மம்தாவுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். பாஜகவும், முழுமையாக ஒருதரப்பாகச் செயல்பட்ட தேர்தல் ஆணையமும் சேர்ந்து உங்கள் மீது பலவிதமான நெருக்கடிகளை அளித்தபோதிலும் அதைக் கடந்து நீங்கள் வென்றுள்ளீர்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x