Published : 02 May 2021 11:04 AM
Last Updated : 02 May 2021 11:04 AM
கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வரும் நிலையில் தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் நீமம் தொகுதியில் போட்டியிட்ட கும்மணம் ராஜசேகர் 887வாக்குகளுடன் முன்னிலையுடன் உள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இதன் மூலம் இந்தத் தேர்தலில் சபரிமலை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியபோதிலும் அது எடுபடவில்லை எனத் தெரிகிறது.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத்த தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மாதம் 6ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவித்தன.
இதன்படி, இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பல தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலையுடன் சென்று வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பின்தங்குகிறது.
இதில் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியி்ட்டு ஒரு இடத்தை வென்ற பாஜக, இந்த முறை 2 இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது
தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 3,500 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரகுநாதன் பின்தங்குகிறார்.
புதுப்பள்ளி தொகுதியில் போட்டியி்ட்ட முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான உம்மன் சாண்டி 3,240 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையுடன் உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தாமஸ் பின்தங்குகிறார்.
நீமம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் 887 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார், அவரை எதிர்த்து களமிறங்கிய மார்க்சிஸ்ட் வேட்பாளர் என். சிவன்குட்டி பின்தங்குகிறார்.
பாலா தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட மாணி சி கப்பன் 8000 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியி்ட்ட கேரள காங்கிரஸ் மாணி வேட்பாளர் ஜோஸ் கே மாணி பின்தங்குகிறார்.
பாலக்காடு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மெட்ரோமென் ஸ்ரீதரன் 3,038 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார், காங்கிரஸ் வேட்பாளர் ஷாப்தி பரம்பில் பின்தங்கியுள்ளார்.
திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியி்ட்ட நடிகர் சுரேஷ் கோபி பின்தங்குகிறார், இந்திய கம்யூனிஸ்டவேட்பாளர் பி பாலச்சந்திரன் 918 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
உடும்பன்சோலை தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.எம்.மாணி, 13 ஆயிரத்து701 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அகஸ்டி பின்தங்குகிறார்.
பத்தினம்திட்டா தொகுதியில் உள்ள 4 தொகுதிகளிலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. திருவல்லா தொகுதியில் போட்டியிட்ட கேரள காங்கிரஸ் வேட்பாளர் ஜோஷி கே பால் 354 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இடதுசாரிக் கூட்டணயில்இடம் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் மேத்யூ தாமஸ் பின்தங்கியுள்ளார்.
ரண்ணி தொகுதியில் கேரள காங்கிரஸ்(மாணி) வேட்பாளர் பிரமோத் நாராயன் 936 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் செறியன் பின்தங்குகிறார்.
கொன்னி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜெனிஷ் குமார் 4,237 வாக்குகள் வித்தியாசத்தில் முந்துகிறார், காங்கிரஸ் வேட்பாளர் ராபின் பீட்டர் பின்தங்குகிறார்.
அடூர் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் சித்தயம் கோபகுமார் 1,219 வாக்குகளுடன் முந்துகிறார், காங்கிரஸ் வேட்பாளர் கண்ணன் பின்தங்குகிறார். ஆரன்முளா தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வீனா ஜார்ஜ் 2,170 வாக்குகளுடன் முந்துகிறார், காங்கிரஸ் வேட்பாளர் சிவதாசன் பின்தங்குகிறார்
சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இதன் மூலம் இந்தத் தேர்தலில் சபரிமலை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியபோதிலும் அது எடுபடவில்லை எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT