

மேற்குவங்கத்தில் தொடக்க நிலை வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி காணப்படுகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தநிலையில் 8 கட்டமாக நடந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க நிலை வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி காணப்படுகிறது.
தொடக்க நிலை வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 46 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும்முன்னிலையில் உள்ளன.