Published : 01 May 2021 01:33 PM
Last Updated : 01 May 2021 01:33 PM
பொது இடங்களில் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயன் விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் மக்கள் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும். பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும். சமூக ஆர்வலர்கள், மதபோதகர்கள், திரையுலக பிரபலங்கள் இந்த விழிப்புணர்வில் பங்குகொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்..
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்துள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,01,993 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,91,64,969 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 1,56,84,406 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2,99,988 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 32,68,710 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT