Published : 01 May 2021 07:29 AM
Last Updated : 01 May 2021 07:29 AM

3-வது கட்ட கோவிட் தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்: 2.5  கோடி பயனாளிகள் பதிவு

புதுடெல்லி

3-வது கட்ட தடுப்பூசித் திட்டத்துக்கு கோவின் இணையதளத்தில் நேற்று வரை 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிவு 2021 ஏப்ரல் 28ம் தேதி தொடங்கியது.

மே 1-ம் தேதி தொடங்கும் 3-வது கட்டத் தடுப்பூசி முகாமுக்கு தகுதியானவர்கள் 28ம் தேதி முதல் கோவின், ஆரோக்கிய சேது செயலிகளில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவி்த்தது.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்ததால், முதல் நாளான 28ம் தேதி ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்ததால் சர்வர் முடங்கி, பின்னர் சரி செய்யப்பட்டது.

3வது கட்ட தடுப்பூசித் திட்டத்துக்கு கோவின் இணையதளத்தில் நேற்று வரை 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிவு 2021 ஏப்ரல் 28ம் தேதி தொடங்கியது.

நாடு முழுவதும் போடப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை நேற்று வரை 15.22 கோடியைக் கடந்தது.
கொவிட் தொற்று நேரத்தில் மனநலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கவும், உளவியல் ஆலோசனை வழங்கவும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மன நலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (நிம்ஹன்ஸ்) 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண் (080-4611 0007)-ஐ இயக்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x