Last Updated : 30 Apr, 2021 03:12 AM

3  

Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

40 வயதுகாரருக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து உயிரைவிட்ட முதியவர்

புதுடெல்லி

மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர் நாராயண் பாவ்ராவ் தபேத்கர் (85). கரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட அவர், கடந்த 16-ம் தேதி அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். நீண்ட போராட்டத்துக்கு பிறகுஅவருக்கு படுக்கை ஒதுக்கப்பட்டது.

அப்போது நடுத்தர வயதுள்ளஒரு பெண் தனது கணவருக்கு படுக்கை ஒதுக்க கோரி மருத்துவமனை நிர்வாகத்திடம் கைகூப்பி, அழுது கொண்டிருந்தார்.

இதை பார்த்து கண்கலங்கிய முதியவர் நாரயண், தனது படுக்கையை அந்த நபருக்கு அளிக்கும்படியும், தான் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இதை தயக்கத்துடன் ஏற்ற மருத்துவர், அப்படுக்கையை 40 வயது குடும்ப தலைவருக்கு வழங்கினார்.

அப்போது நாராயண் கூறும்போது, ‘நான் 85 வயதை கடந்துவிட்டேன். நல்லது, கெட்டதுகளை பார்த்துவிட்டேன். இந்த படுக்கை என்னைவிட இப்பெண்ணின் கணவருக்கு அதிக அவசியமாக உள்ளது. இவர் இறந்து போனால், அவரது குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே, இந்த நபரின் வாழ்க்கையை காப்பது எனது கடமை. எனது படுக்கையை அவருக்கு ஒதுக்கி விடுங்கள்’ என தெரிவித்தார்.

வேறு வழியின்றி அவரது வேண்டுகோளை எழுத்து மூலமாகவும் பெற்று நாராயண் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமாகி அடுத்த 3 நாட்களில் அவர் உயிரிழந்தார்.

முதியவர் நாராயணின் உயிர் தியாகம் குறித்து சமூகவலை தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் செய்த புனித தியாகம் மதிப்பிட முடியாதது என்று சிலர் கூறியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் தொண்டர்

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைமையகம் நாக்பூரில் உள்ளது. இதன் தொண்டராகவும் நாராயண் பணியாற்றிஉள்ளார். அவரது உயிர் தியாகத்தை பாராட்டி வணங்குவதாக, பாஜக ஆளும் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புகழாரம் சூட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x