Last Updated : 29 Apr, 2021 10:34 PM

1  

Published : 29 Apr 2021 10:34 PM
Last Updated : 29 Apr 2021 10:34 PM

டெல்லியின் ஆக்சிஜன் தேவை 700 மெட்ரிக் டன்னாக இருக்க அதற்கு 490 அளிப்பது ஏன்? -மற்ற மாநிலங்களுக்கு கூடுதல் விநியோகம் ஏன்: மத்திய அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த வழக்கில் இன்றும் விசாரணை நடைபெற்றது. இதில், டெல்லியில் 700 மெட்ரிக் டன் என்றிருக்க குறைவாக 490 கொடுப்பது ஏன்? எனவும், மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக அளிப்பது ஏன்? என்றும் சராமரியாக மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கானப் பதிலை முழுவிவரத்துடன் பதிலை நாளை தாக்கல் செய்யும்படி வழக்கின் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனையில் டெல்லி அரசிடம் ஆக்ஸிஜனை சேமிக்கும் வசதி இல்லை என மத்திய அரசு கூறி வருகிறது.

எனவே, இதே பதிலை நாளை மத்திய அரசு தாக்கல் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இப்பிரச்சனையில் மற்ற மாநிலங்களுக்கு அதிகமான ஆக்ஸிஜன் ஒதுக்கியது ஏன் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாக ’அமிக்கஸ் கியுரி’ என்றழைக்கப்படும் வழக்கறிஞர் குழு அமர்த்தப்பட்டுள்ளது. இக்குழுவுடன் டெல்லி அரசு இணைந்து நீதிமன்றத்தின் முன் சில முக்கிய விவரங்கள் அளித்துள்ளன.

இதில் குறிப்பிடுப்பதாவது, ’மகராஷ்டிரா மாநிலம் 1500 மெட்ரிக் டன் கேட்டிருக்கிறது. அதற்கு 1661 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 445 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தன் தேவையாக மத்தியப்பிரதேச, கேட்டிருந்தது. இதற்கும் கூடுதலாக என மத்திய அரசு, 540 மெட்ரிக் டன் அளித்துள்ளது.’ எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன், ரெம்டெஸ்வீர் மருந்துகளும், டெல்லியின் கருப்புச் சந்தைகளில் விற்கப்படுவதையும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதற்கு உதாரணமாக டெல்லி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகளின் விவரம் காட்டப்பட்டது.

இதை கண்டித்ததுடன், அவற்றை தடுத்து நிறுத்தி முறையாக மருத்துவமனைகளில் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x