Published : 29 Apr 2021 03:16 PM
Last Updated : 29 Apr 2021 03:16 PM
கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் கடிதம் எழுதி, 5 முக்கிய அம்சங்களை வலியுறுத்தியிருந்தார். தடுப்பூசி போடுதலை விரைவுப்படுத்த வேண்டும், தடுப்பூசி போடும் வயதினரைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை வழங்கியிருந்தார்.
மன்மோகன் சிங் கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் , மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறை ஏற்பட்டதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் மன்மோகன் சிங் சிகிச்சை முடிந்து இன்று அவர் ஊர் திரும்பினார். அவரை மருத்துவர்கள் வழியினுப்பி வைத்தனா்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT