Published : 26 Apr 2021 08:51 AM
Last Updated : 26 Apr 2021 08:51 AM

140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு செல்ல இந்திய ரயில்வே நடவடிக்கை

புதுடெல்லி

போர்க்கால அடிப்படையில், இந்திய ரயில்வே 140 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான ஆக்சிஜன் விநியோகிக்கவிருக்கிறது.

மொத்தம் உள்ள 9 டேங்கர்களில், 5 டேங்கர்கள் லக்னோவை நேற்று இரவு சென்றந்தது. பொக்காரோவிலிருந்து திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் புறப்பட்டுள்ள மீதமுள்ள 4 டேங்கர்கள் இன்று அதிகாலை லக்னோ சென்றடைந்தது.

இதுவரை நாக்பூரில் இருந்து நாசிக் வழியாக மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கும், லக்னோவில் இருந்து பொக்காரோவிற்கும், பின்னர் மறுவழிகளிலும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன. 150 மெட்ரிக் டன்கள் திரவ பிராணவாயுவுடன் 10 கொள்கலன்கள் இதுவரை ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன.

4 டேங்கர்களுடன் (சுமார் 70 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு) ஓர் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு டெல்லி ராய்கரிலிருந்து சத்திஸ்கர் புறப்பட்டது.

கீழ்காணும் வழித்தடங்களில் பிராணவாயுவை ஏற்றிச் செல்ல இந்திய ரயில்வே முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளது.

மஹாராஷ்டிராவிற்கு கூடுதல் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்காக ஜாம்நகரில் இருந்து மும்பைக்கும், நாக்பூர்/ புனே முதல் விசாகப்பட்டினம் அங்குல் வரை ஆக்சிஜனை ஏற்றிச்செல்ல இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தெலங்கானாவிற்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கு, அங்குலிலிருந்து செகந்தராபாத் வரையிலான வழித்தடத்தை இந்திய ரயில்வே தேர்ந்தெடுத்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்திற்கு, அங்குல் முதல் விஜயவாடா வரையிலான வழித்தடத்தில் திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே கொண்டு செல்லும்.

அதேபோல் மத்திய பிரதேசத்திற்கு ஜாம்ஷெட்பூர் முதல் ஜபல்பூர் வரையிலான வழித்தடத்தில் பிராணவாயு டேங்கர்கள் ஏற்றிச் செல்லப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x