Published : 25 Apr 2021 10:47 AM
Last Updated : 25 Apr 2021 10:47 AM
நாட்டில் கரோனா அன்றாட பாதிப்பு 3,49,691 ஆக பதிவாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் புதிய உச்சம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,49,691 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 4வதுநாளாக அன்றாட கரோனா தொற்று 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 15ம் தேதிக்குப் பின்னர் அன்றாட கரோனா பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா பாதிப்பு புள்ளிவிவரம்:
மொத்த பாதிப்பு: 1,69,60,172
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை: 2,17,113
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,40,85,110
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை: 2,767
மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,40,85,110
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 26,82,751
இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை: 14,09,16,417
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் புதிதாக 67,000 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக கரோனா பாதிப்பு 7000க்கு கீழ் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவிலும், மேற்குவங்கத்திலும் ஒரு நாள் கரோனா பாதிப்பு அதிகமாகப் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் நேற்று ஒரு நாள் பாதிப்பு 30,000. பெங்களூருவில் 17,000 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...