Last Updated : 25 Apr, 2021 07:31 AM

3  

Published : 25 Apr 2021 07:31 AM
Last Updated : 25 Apr 2021 07:31 AM

உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் சந்தானகவுடர் காலமானார்

கோப்புப்படம்

புதுடெல்லி


உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தானகவுடர் நுரையீரல் தொற்று காரணமாக நேற்று காலமானார். அவருக்குவயது 65.

நுரையீரல் தொற்று காரணமாக, குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தானகவுடர் நேற்று இரவு காலமானார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவுவரை சந்தானகவுடர் உடல்நிலை சீராகத்தான் இருந்துள்ளது, நள்ளிரவு 12.30 அளவில் திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டு சந்தானக்கவுடர் உயிரழந்தார் என்று மருத்துவர்கள் அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.

ஆனால், நீதிபதி சந்தானக்கவுடர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, அதுகுறித்து கருத்துக் கூற மருத்துவர்களும் மறுத்துவிட்டனர்.

நீதிபதி மோகன் எம்.சந்தானகவுடர்

கடந்த 1958-ம் ஆண்டு மே 5ம் தேதி கர்நாடகாவில் பிறந்த சந்தானகவுடர் வழக்கறிஞராகப் பட்டம் பெற்று கடந்த 1980,செப்டம்பர் 5ம் தேதி தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.

2003, மே 12ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக சந்தானகவுடர் நியமிக்கப்பட்டு, பின்னர் 2004, செப்டம்பரில் நிரந்தர நீதிபதியாக பதவி வழங்கப்பட்டது.

அதன்பின் கேரள உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சந்தானகவுடர், 2016, ஆகஸ்ட் 1்ம்ததேதி தற்காலிக தலைமை நீதிபதியாக செயல்பட்டார். 2016, செப்டம்பர் 22ம் தேதி கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிபதியாக சந்தானகவுடர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக சந்தானகவுடர் நியமிக்கப்பட்டு பணியாற்றிவந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x