Published : 25 Apr 2021 04:27 AM
Last Updated : 25 Apr 2021 04:27 AM

கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசிகள், மருத்துவ ஆக்சிஜன் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்தது மத்திய அரசு

புதுடெல்லி

கரோனா தொற்று எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிற நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் அது தொடர்பான உபகர ணங்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு, கரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் மீதான இறக்குமதி வரியை அடுத்த மூன்று மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது. ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் குறிப்பாக, ஜெனரேட்டர், சேமிப்புக் கலன் போன்றவை மீதான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி கையிருப்பை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. விரைவிலேயே ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V இந்தியாவுக்கு வர உள்ளது. மேலும், ஃபைஸர், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் போன்ற நிறுவனங்களும் அதன் தடுப்பூசியை இந்தியாவில் விற்கவேண்டும் என்று மத்திய அரசு அந்நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல மருத்துவமனைகளில் தேவை
யான அளவில் படுக்கை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் உயிரிழப்பும் அதிகம் நிகழ்ந்துவருகிறது.

மோசமான மருத்துவக் கட்ட மைப்பு மற்றும் முறையான திட்டமிடாமை காரணமாகவே நிலைமை மிக மோசமாக மாறி யுள்ளாதாக பிரதமர் மோடியை மக்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் கரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக மூன்று சந்திப்புகளை மோடி நடத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடனும், அதற்குமுன்தினம் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை அதிகரிக்க அரசு அதிகாரிகளுடனும் கலந்தாலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x