Published : 24 Apr 2021 11:32 AM
Last Updated : 24 Apr 2021 11:32 AM
உங்களை விளம்பரப்படுத்துவதற்கும், தேவையற்ற திட்டத்துக்கு செலவிடுவதற்கு பதிலாக சுகாதாரத்துறைக்கும், தடுப்பூசி எளிதாகக் கிடைக்கவும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் செலவிடுங்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
தடுப்பூசி பற்றாக்குறையும் பல மாநிலங்களில் நிலவுகிறது. இதைச் சரிசெய்ய மத்திய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை அனுப்பி வருகிறது,ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசு தேவையற்ற தி்ட்டங்களுக்குசெலவிடுவதற்கு பதிலாக சுகாதாரத்துறைக்கு செலவிடலாம் எனத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மத்திய விஸ்டா திட்டம், புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி திருப்பிவிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி இந்த கருத்தைத் தெரிவித்துள்ளா்
இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் விடுத்த கோரிக்கையில் “மத்திய அரசு தன்னை விளம்பரப்படுத்துவதற்கும், தேவையற்ற திட்டங்களுக்கும், செலிவிடும் தொகையை நிறுத்தி, அந்தத் தொகையை தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைத்தல், ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் போக்குதல் உள்ளிட்ட சுகாதாரத்துறைக்குச் செலவிடலாம்.
இனிவரும் நாட்களில் கரோனா வைரஸால் சிக்கல் இன்னும் தீவிரமாகும்.இதை சமாளிக்க இந்த தேசம் தயாராக வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவலநிலை தாங்கிக்கொள்ள முடியாதது.” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT