Published : 01 Dec 2015 04:37 PM
Last Updated : 01 Dec 2015 04:37 PM
உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்ட தீவிரவாதியின் குழந்தையை ஊட்டச்சத்துடன் வளர்க்க மாட்டேன் என அதை வயிற்றில் சுமக்கும் மனைவி அறிவித்துள்ளார்.
இதனால், தந்தை செய்த பாவத்தை குழந்தையின் மீது சுமத்த தீவிரவாதியின் மனைவி முயல்வதாக கருதப்படுகிறது.
டெல்லிக்கு வெகு அருகாமையில் உள்ள மீரட் நகரில் கடந்த வாரம் நவம்பர் 27-ல் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது கலாம் என்கிற முகமது எஜாஜ். பிஹாரில் இருந்து பிழைப்பிற்காக லக்னோ இடம் பெயர்ந்து தன் குடும்பத்துடன் வாழும் அஸ்மா எனும் பெண்ணை கடந்த வருடம் மணம் முடித்து பரேலியில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
இங்கு திருமண நிகழ்ச்சிகளில் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் பணி செய்வது போல் தீவிரவாத நடவடிக்கையில் இறங்கிய போது கைது செய்யப்பட்டார். இவரது எட்டு மாதக் குழந்தையை தற்போது வயிற்றில் சுமக்கும் அஸ்மா அதை, பெற்று எடுப்பேனே தவிர ஊட்டச்சத்துடன் வளர்க்க மாட்டேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அஸ்மா கூறுகையில், ‘எஜாஜ் ஒரு அனாதை எனக் கூறி கொல்கத்தாவில் வாழும் தன் தூரத்து உறவினர் மூலமாக அறிமுகமானார். அவர் ஒரு தீவிரவாதி எனத் தெரியாமல் எஜாஜை எனக்கு மணமுடித்தனர். இப்போது ஒரு தீவிரவாதி குழந்தையை பெற்று எடுப்பதில் அவமானப்படுகிறேன். ஆனால், அதை ஊட்டச்சத்துடன் வளர்க்க மாட்டேன். தான் ஒரு தீவிரவாதியின் மனைவி என்ற பழியுடன் என் வாழ்நாள் முழுவதிலும் வாழ விரும்பவில்லை. எஜாஜ் செய்த பாவத்திற்கு கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தின் பகுதியான இர்பானாபாத்தை சேர்ந்தவர் முகம்மது எஜாஜ். இவருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, நன்கு பயிற்சி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9, 2013-ல் பங்களாதேஷ் வழியாக மேற்கு வங்கத்தின் பர்தானாவில் நுழைந்திருக்கிறார். இவருக்கு உ.பி.யின் மேற்கு பகுதியில் உள்ள இந்திய இராணுவம் பற்றிய தகவல் அளிக்கவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆள் சேர்க்கவும் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு இவரை இந்தியா அனுப்பி வைத்ததாக உ.பி. போலீஸார் கருதுகின்றனர்.
எஜாஜின் அலிகர் தொடர்பு
உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களையும் சந்தித்து அவர்களை ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கு இழுக்க முயன்றதாக தெரிய வந்திருக்கிறது. உபியின் மேற்கு பகுதியில் உள்ள அலிகர் நகரிலும் தனியார் கல்லூரிகளில் பயிலும் ஆறு மாணவர்களை சந்தித்து எஜாஜ் பேசி வந்தததாகவும் உபி போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து அந்த ஆறு மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT