Published : 22 Apr 2021 08:41 AM
Last Updated : 22 Apr 2021 08:41 AM
கரோனா தொற்றின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி காலமானார். அவருக்கு வயது 34.
இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்றுக்கு எனது மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை இழந்துவிட்டேன் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
It is with great sadness that I have to inform that I lost my elder son, Ashish Yechury to COVID-19 this morning. I want to thank all those who gave us hope and who treated him - doctors, nurses, frontline health workers, sanitation workers and innumerable others who stood by us.
யெச்சூரியின் மகன் மறைவுக்கு ட்விட்டரில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி குர்கானில் தனியார் மருத்துவமனையில் 2 வாரங்களுக்கும் மேலாக ஆசிஷ் யெச்சூரி சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததாகக் கருதப்பட்ட நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் அவர் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிஷ், டெல்லியில் உள்ள பத்திரிகை ஒன்றில் பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT