Published : 02 Dec 2015 10:50 AM
Last Updated : 02 Dec 2015 10:50 AM

கழிப்பறையில் குழந்தை பெற்ற 9-ம் வகுப்பு மாணவி: பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கடந்த சனிக் கிழமை, பள்ளி கழிப்பறையில் 9-ம் வகுப்பு மாணவி குழந்தையைப் பிரசவித்தார். இந்த சம்பவம் குறித்து அலட்சியமாக நடந்து கொண்டதாக பள்ளியின் தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரங்காரெட்டி மாவட்டம், மாதாப்பூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த சனிக்கிழமை, பள்ளியின் கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். இச்சம்பவம் பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி படிக்கும் பள்ளியில் 7 ஆசிரியைகள் பணியாற்றுகின் றனர். அவர்களில் யாருக்கும் மாணவி கர்ப்பமாக இருக்கிறாள் என்பது தெரியவில்லை. அம் மாணவியின் பெற்றோருக்கும் தெரியவில்லை.

இச்சம்பவம் குறித்து சிறுவர் கள் நல உரிமை கழகம் விசா ரணைக்கு உத்தரவிட்டது. தெலங்கானா கல்வி அமைச்சரும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மாணவர் அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் போராட் டத்தில் ஈடுபட்டன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டம் நடந்தது. மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரடியாக விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதாக, மண்டல கல்வி அதிகாரியும் இந்த பள்ளி யின் தலைமை ஆசிரியருமான பாசவலிங்கம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் 7 ஆசிரியைகளுக்கு ‘மெமோ’ வழங்கப்பட்டது.

போலீஸார் விசாரணையில், மாணவியின் அக்கா அருணா, படிப்பை பாதியில் கைவிட்டு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. தன் மூலமாக தனுஷ் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக தன் தங்கை கர்ப்பமானதாக, அருணா வாக்குமூலம் கொடுத்திருப்பதாக மாதாபுரம் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x