Published : 18 Apr 2021 07:29 PM
Last Updated : 18 Apr 2021 07:29 PM
மொத்தம் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை, 18 லட்சத்து ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்,பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊடரங்கை பிறப்பித்து மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளன. பல மாநிலங்களுக்கு தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது.
கரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வே முழு அளவில் தயாராகி கொண்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது காலியாக இருக்கும் பெட்டிகள் மீண்டும் தற்காலிக ரயில் பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.
இதனால் ரயில் பெட்டிகளையும், கேபின்களையும் தனிமைப்படுத்துதலுக்கான மையங்களாக மாற்றும் பணியை ரயில்வே செய்து வருகிறது. இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி அங்கிருந்து சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக மொத்தம் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் கரோனா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT