Published : 18 Apr 2021 04:43 PM
Last Updated : 18 Apr 2021 04:43 PM
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவரே தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் முதல் அலையில் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 2-வது அலையிலும் பலரும் இலக்காகி வருகின்றனர்.
சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், காங்கிரஸ் கட்சியிலும் ரண்தீப் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங் என பல தலைவர்கள் பாதி்க்கப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுுவும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக 49 வயதாகும் அமைச்சர் கிரண் ரிஜுஜூ ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவர்களின் ஆலோசனைப் படி நடக்கிறேன்.
என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நான் உடல்ரீதியாக நலமாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற கிரண் ரிஜிஜூ நீர் விளையாட்டுப் போட்டிகளைதொடங்கி வைத்தார். கரோனாவிலிருந்து மீண்ட முதல்வர் திராத் சிங் ராவத்தும் உடன் இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT