Last Updated : 17 Apr, 2021 03:10 PM

 

Published : 17 Apr 2021 03:10 PM
Last Updated : 17 Apr 2021 03:10 PM

உக்ரைன், வெனிசுலா மக்கள் தொகைக்கு சமம்: உலகளவில் கரோனாவில் உயிரிழப்பு 30 லட்சத்தைக் கடந்தது

பிரதிநிதி்த்துவப்படம்

ரியோ டி ஜெனிரோ

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது என்று ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கரோனா வைரஸுக்கு எதிராகச் செயலப்படுத்தப்படும் தடுப்பூசி முகாமில் திடீர் தொய்வு ஏற்பட்டிருப்பதே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம். குறிப்பாக கரோனா வைரஸ் பிரச்சினை தற்போது பிரேசில், இந்தியா, பிரான்ஸ் நாடுகளி்ல் தீவிரமடைந்து, பாதிப்புகளும் அதிகரி்த்து வருகின்றன, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின்படி, உலகளவில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 14 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது. இந்த உயிரிழப்பு என்பது, கிவ், உக்ரைன், கார்காஸஸ் வெனிசுலா, லிஸ்பன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் மக்கள் தொகைக்கு இணையானது.

சிகாகோ நகரில் 27 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் அதைவிட இந்த உயிரிழப்பு அதிகமானது, அமெரிக்காவின் பிலடெல்பியா, டலாஸ் மாநிலங்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையாக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் உண்மையான உயிரிழப்பு இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். பெரும்பாலான நாடுகள் உயிரிழப்பு குறித்து உண்மையான விவரங்களை அளிக்கவில்லை.

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாடுகளுக்கு இடையே மாறுபடுகிறது. பல்வேறு நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம், மக்களின் விழிப்புணர்வு மூலம் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா தீவிரமாக இருக்கின்றன. ஆனால், இந்தியா, பிரான்ஸ் நாடுகளில் கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதில் பின்னடைவும், கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நகரங்களில் மீண்டும் லாக்டவுன், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

உலகளவில் நாள்தோறும் கரோனாவில் சராசரியாக, 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர், 12 ஆயிரம் பேர் நாள்தோறும் உயிரிழக்கின்றனர். உலகளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 5 ஒருபகுதி அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது, அங்கு 5.60 லட்சம் பேர் கரோனாவில் உயிரிழந்துள்னர். அதைத் தொடர்ந்து பிரேசில், மெக்சிக்கோ, இந்தியா, பிரிட்டன் நாடுகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x