Published : 17 Apr 2021 11:15 AM
Last Updated : 17 Apr 2021 11:15 AM
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் வழக்கம் போல் பெய்யும் என்றும், நீண்டகால சராசரியின் 96 முதல் 104 சதவீதம் வரை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
2003-ம் ஆண்டு முதல் தென்மேற்கு பருவ மழைக்கான (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நீண்டகால முன்னறிவிப்பை இரண்டு கட்டங்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.
கடல் பரப்பின் நிலவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் கவனமாக கண்காணித்து வருகிறது.
1961 முதல் 2010 வரையிலான நாட்டின் நீண்டகால சராசரி பருவகால மழையின் அளவு 88 சென்டிமட்டர் ஆகும்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழையின் அளவு நீண்ட கால சராசரியான 98 சதவீதமாக இருக்கும் (5 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் வழக்கம் போல் பெய்யும். நீண்டகால சராசரியின் 96 முதல் 104 சதவீதம் வரை இருக்கும்.
2021 மே மாதத்தின் கடைசி வாரத்தில் புதிய வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும். ஏப்ரலில் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புக்கு கூடுதலாக, நான்கு மண்டலங்களுக்கான, மழை காலத்திற்கான (ஜூன் முதல் செப்டம்பர் வரை) முன்னறிவிப்பு மற்றும் ஜூன் மாதத்திற்கான முன்னறிவிப்பும் வெளியிடப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT