Published : 17 Apr 2021 09:59 AM
Last Updated : 17 Apr 2021 09:59 AM
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1341 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்:
கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 2,34,692 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் 1,23,354 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை 1,26,71,220 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 16,79,740 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில்1,341 பேர் பலியாகினர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,75,649 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 11,99,37,641 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 60,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 281 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக மாநிலம் முழுவதும் ஊரடங்குக்கு நிகரான தடை உத்தரவுகளை அடுத்த 15 நாட்களுக்கு அமல்படுத்தி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.
மகாராஷ்டிராவை அடுத்து மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, ராஜ்ஸ்தான் மாநிலங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தான் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகமாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 63,729 பேருக்கும், டெல்லியில் 19,486 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதமும், இரண்டாவது முறையாகவும் முகக்கவசம் அணியாமல் விதியை மீறுபவர்களுக்கு ரூ.10000 அபராதமும் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
11 மாநிலங்களில் கரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இன்று காலை 11.30 மணியளவில் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதேபோல், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று கரோனா நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.அமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திரா ஜெயின் உடன் உயர் அதிகாரிகள் பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT