Published : 14 Apr 2021 09:39 AM
Last Updated : 14 Apr 2021 09:39 AM

தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபர் ஜோ பிடெனும் வாழ்த்து

தமிழகத்தில் சித்திரை 1ம் நாளான இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், அசாம் மக்கள் இன்று போஹக் பிஹூ கொண்டாடுவதால் அம்மாநில மக்களுக்கு அசாமீஸ் மொழியில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
ஒடியா மக்களுக்கு சங்க்ராந்தி வாழ்த்துகளும், கேரள மக்களுக்கு விஷு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு நாள் என்பதால் கோயில்களில் மக்கள் கூட்டம் கூடும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க

அமெரிக்க அதிபர் வாழ்த்து:

அமெரிக்க அதிபர் ஜோ பிடென் ட்விட்டரில் தெவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்கள் வைசாகி, நவராத்ரி, சோங்ரான் உள்ளிட்ட விழாக்களை இந்த வாரத்தில் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

— President Biden (@POTUS) April 13, 2021

அதேபோல் வங்காள மக்களுக்கும், கம்போடிய, லாவோஸ் மக்களுக்கும் நேபாள, சிங்கள மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறேன். தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். விஷு வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x