Published : 13 Apr 2021 01:01 PM
Last Updated : 13 Apr 2021 01:01 PM

தமிழகம், கேரள கடற்கரை பகுதிகளில்  ஏப்ரல் 14-16 வரை மழைக்கு வாய்ப்பு

புதுடெல்லி

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக கேரள கடற்பகுதிகளில் கூடுதல் வாய்பபு இருப்பதாக கூறியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெப்ப வளி மண்டல அளவில் தெற்கு தீபகற்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுழற்காற்று வீசுவதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மேற்கு தீபகற்ப பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 14-16 வரை தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு மற்றும் மலைப் பிரதேசங்களிலும், மாஹே மற்றும் கர்நாடகாவின் கடலோர மற்றும் தெற்கு பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். கேரள கடற்பகுதிகளில் கூடுதலாக மழைக்கு வாய்ப்புள்ளது.

மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலங்கானா, சத்தீஸ்கர், கங்கை நதி பாயும் மேற்குவங்க பகுதிகள் மற்றும் ஒடிசாவில் அடுத்த 4-5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக் கூடும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x