Published : 09 Apr 2021 01:00 PM
Last Updated : 09 Apr 2021 01:00 PM
தெலங்கானாவில் மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியாமல் சென்று அவர்களிடம் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நேற்று இரவு முதல்வர் சந்திரசேகர் ராவ் பிறப்பித்தார்.
மாநிலங்களி்ல் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது குறித்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்துக்குப்பின் மாநிலத் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலர் உயர் அதிகாரிகளுடன், முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அதிகாரிகளிடம், மக்கள் வெளியே நடமாடும்போது முகக்கவசத்தை கட்டாய வேண்டும்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முகக்கவசம் கட்டாயம். முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் மக்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கலாம் . இதை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நகரங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்தி, தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதலை அதிகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
அடுத்த ஒருவாரத்துக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து முன்களப்பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திகரேசகர் ராவ் உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட மக்களை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஊட்டவும், காவல்துறையினரும் முகக்கவச விதிகளை கடுமையாக பின்பற்றவும் காவல் டிஜிபிக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
பஞ்சாயத்து ராஜ், நகராட்சி நிர்வாகம், நகர மேம்பாடு, மாநகராட்சிகள்,போக்குவரத்து துறை ஆகியவற்றஇல் பணியாற்றும் ஊழியர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒவ்வொரு நாள் நிலவரத்தையும் ஒவ்வொரு துறையும் தனக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT