Published : 07 Apr 2021 07:49 PM
Last Updated : 07 Apr 2021 07:49 PM
கரோனா தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் தேவையுள்ளவர்கள், விருப்பமுள்ளவர்கள் என்ற பேச்சு அபத்தமானது, முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசை சாடியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணியையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. தற்போது 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தடுப்பூசி யாருக்குத் தேவைப்படுமோ அவர்களுக்கு வழங்கப்படும். விருப்பமில்லாதவர்களுக்கு வழங்கப்படாது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “தடுப்பூசி போடும் விவகாரத்தில் தேவையுள்ளவர்கள், விருப்பமுள்ளவர்கள் எனப் பேசுவது முட்டாள்தனமானது. ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்வைப் பெறத் தகுதியுள்ளவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கரோனா விதிகளை மீறியதற்காக ஒருவரை போலீஸார் சாலையில் கொடூரமாகத் தாக்கும் காட்சியைப் பதிவிட்டுள்ளார்
அதுகுறித்து ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “கரோனா விதிகளை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் இதுபோன்ற வெட்கப்படக்கூடிய, மனிதநேயமற்ற செயல்கள் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீஸார் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டால், மக்கள் எங்கு செல்வார்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
कोरोना नियमों को लागू करने की आड़ में इस तरह की शर्मनाक अमानवीयता देश को स्वीकार नहीं!
सुरक्षा करने वाले पुलिसकर्मी ही अत्याचार करें तो जनता कहाँ जाये?#Indore pic.twitter.com/t3Ifv0ajJ0
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT