Published : 07 Apr 2021 04:23 PM
Last Updated : 07 Apr 2021 04:23 PM
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகி பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. 10 மாநிலங்களில்தான் கடந்த சில வாரங்களாக தொற்று கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 1.15 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. 2-வது அலையில் நோய்ப் பரவலின் வேகம் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதிப்பும் அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து736 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 28 லட்சத்து ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 8-ம் தேதி நிலவரப்படி ஒருநாள் பாதிப்பு என்பது 18,327 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் ஒரு நாள் பாதிப்பு என்பது 1.15 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 நாட்களில் 8 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 நாட்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்திலிருந்து 8 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோனா முதல் அலையின்போது 66 நாட்களுக்குப் பின்புதான் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு இருந்தது. ஆனால் 2-வது அலையில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6.59 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் சதவீதம் படிப்படியாகக் குறைந்து 92.11 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,92,135 ஆக இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி கரோனா பாதிப்பு ஒரு கோடியை எட்டியது. அதன்பின், 109 நாட்களில் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், கரோனா முதல் அலையின்போது 2020, ஆகஸ்ட் 30-ம் தேதி 30 லட்சத்தை எட்டியது. அதாவது மார்ச் 25 முதல், 157 நாட்களுக்குப் பின்புதான் 30 லட்சத்தை எட்டியது. ஆனால், ஒரு கோடியைக் கடந்தபின் 109 நாட்களில் 28 லட்சத்தை பாதிப்பு எட்டியுள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பாதிப்பு 30 லட்சத்தை எட்டிவிடும். இதனால் முதல் அலையைவிட 2-வது அலையில் பாதிப்பின் வேகம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மாநிலங்கள் |
மொத்த பாதிப்பு |
நேற்றைய பாதிப்பு |
நேற்றைய உயிரிழப்பு |
மொத்த உயிரிழப்பு |
குணமடைந்தவர்கள் |
இந்தியா |
12,801,785
|
1,15,736 |
630 |
1,66,177
|
11,792,135 (நேற்று 59,856) |
மகாராஷ்டிரா |
31,13,354 |
55,469 |
297 |
56,330 |
25,83331 (34,256) |
கேரளா |
11.41,092 |
3,502 |
14 |
4,694 |
1,106,123 (1,898) |
கர்நாடகா |
10,26,584 |
6,150 |
39 |
12,696 |
9,68,762 (3.487) |
ஆந்திரப்பிரதேசம் |
9,10,943 |
1,941 |
7 |
7,251 |
8,91,883 (835) |
தமிழகம் |
9,07,124 |
3,645 |
15 |
12,804 |
8,68,722 (1,809) |
டெல்லி |
6,85,602 |
5,100 |
17 |
11,113 |
6,56,617 (2,340) |
உ.பி. |
6,39,928 |
5,895 |
30 |
8.924 |
6,03,495 (1,176) |
மே.வங்கம் |
5,97,634 |
2,058 |
7 |
10,355 |
5,75,704 (722) |
சத்தீஸ்கர் |
3,86,269 |
9,921 |
53 |
4,416 |
3,29,408 (1,719) |
ஒட்டுமொத்த பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்தான் 50 சதவீதம் பங்களிப்பாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் 55,469 பேர் பாதிக்கப்பட்டனர். 297 பேர் உயிரிழந்தனர். அடுத்ததாக சத்தீஸ்கரில் கடந்த 24 மணி நேரத்தில் 9,921 பேர் பாதிக்கப்பட்டனர். 53 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், கரோனா பாதிப்பில் முதல் 5 இடங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கேரளா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 4-வது இடத்திலும், தமிழகம் 5-வது இடத்திலும் உள்ளன.
நாள்தோறும் பாதிப்பு கணக்கை எடுத்துக்கொண்டால், உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா, சத்தீஸ்கர் மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவுதான். ஆனால், ஒட்டுமொத்த பாதிப்பில் 5-வது இடத்தில் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT