Published : 07 Apr 2021 10:49 AM
Last Updated : 07 Apr 2021 10:49 AM
மேற்கு வங்கத்தின் கூச் பிஹாரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு மூதாட்டி மயங்கி விழுந்தார். அவருக்காகத் தன் பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர் நரேந்தர மோடி தம் மருத்துவக் குழுவிற்கு உதவ உத்தரவிட்டார்.
பிரதமர் மோடி நேற்று நான்காம் கட்டத் தேர்தலுக்கானத் தீவிரப் பிரச்சாரம் தொடங்கினார். இதற்காக கூச் பிஹார் பகுதியின் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அடித்த கடும் வெயிலின் காரணமாகக் கூட்டத்தில் ஒரு பெண் மூதாட்டி மயங்கி விழுந்தார். இதனால், கூட்டத்தினர் இடையே லேசான சலசலப்பு எழுந்தது.
இதை மேடையிலிருந்தபடி கவனித்து விட்ட பிரதமர் மோடி தனது உரையை நிறுத்தினார். அங்கிருந்தபடியே தனது மருத்துவக் குழுவினரிடம் அம்மூதாட்டி உதவவும் உத்தரவிட்டார்.
இது குறித்து தனது உத்தரவில் பிரதமர் மோடி கூறுகையில், ‘‘எனது மருத்துவக் குழுவினர் உடனடியாக அப்பெண் மூதாட்டி உள்ள இடத்திற்கு வரவும். அவருக்கு குடிக்க நீர் அளித்து உடல்நிலையை சோதித்து மருத்துவ உதவி அளிக்கவும்’’ எனக் குறிப்பிட்டார்.
இதை கேட்டு கூட்டத்தினர் உற்சாகக் குரல் எழுப்பினர். அதேசமயம் அம்மூதாட்டிக்கும் பிரதமர் மோடியின் மருத்துவக் குழுவினரால் உதவி கிடைத்திருந்தது. இம்மாநிலத்தில் இன்னும் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT