Published : 27 Nov 2015 09:48 AM
Last Updated : 27 Nov 2015 09:48 AM
கட்சிகள் தாங்கள் சொந்தமாக நடத்தும் பத்திரிகைகள், ஊடகங் களால் மக்களை குழப்பி வரு கின்றன. அரசின் செயல்பாடுகளை திரித்து வெளியிடுகின்றன என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரி வித்துள்ளார்.
மகளிர் சங்கங்கள் மூலம் மணல் அள்ளும் திட்டம் குறித்த அறிக்கையை விஜயவாடாவில் நேற்று அவர் வெளியிட்டார். இத் திட்டம் மூலம் கடந்த ஓராண்டில் அரசுக்கு ரூ. 817 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அவர் தெரி வித்தார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:
அரசின் தவறான போக்கை பத்திரிகைகள், ஊடகங்கள் மக் களுக்கு எடுத்துரைக்கலாம். அதே சமயத்தில் அரசின் நல்ல திட்டங் களையும் அதன் மூலம் மக்கள் பயன் அடைந்ததையும் எடுத்து ரைக்க வேண்டும். ஆனால் ஆந்திரா, தெலங்கானா மட்டு மின்றி நாடு முழுவதும் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வர்கள் சொந்தமாக தங்களுக் கென ஒரு பத்திரிகை, ஊட கத்தை செயல்படுத்தி வருவ தோடு, செய்திகளை திரித்து மக்க ளுக்கு கூறி வருகின்றனர். இதன் மூலம் மக்களை குழப்ப நினைக் கின்றனர். இவர்கள் கூறுவதை அப்படியே மக்கள் நம்பி விடுவதாக இவர்கள் நம்பு கின்றனர்.
பல கோடி முறைகேடு செய்தவர் கள் கூட, பத்திரிகை நடத்தி கொண்டு எதிராளியை விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளது. 33 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ள தெலுங்கு தேச கட்சிக்கு இதுவரை சொந்தமாக ஒரு பத்திரிகையோ, ஊடகமோ இல்லை. இதே போன்று காங்கிரஸ், பாஜக, கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி போன்றவர் களுக்கும் எந்தவித பத்திரிகையோ, ஊடகமோ இல்லை. ஆதலால் இல் லாத ஒன்றை ஊடகம், பத்திரிகை நடத்தும் கட்சி திரும்ப திரும்ப கூறினாலும் அது உண்மையாகாது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT