Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM
மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் ஐசிசிஆர் அமைப்பு செயல் படுகிறது. இதன் சார்பில் 1970-ம்ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய அரசு சார்பிலானஇருக்கைகள் அமைக்கப்பட்டுள் ளன. இதில் ஐசிசிஆர் அமைப் பால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் பேராசிரியருக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கும்.
வெளிநாடுகளின் 69 கல்வி நிறுவனங்களில் இந்திய இருக்கைகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக இந்திக்கு 25-க்கும் மேற்பட்ட இருக்கைகளும் இதையடுத்து சம்ஸ்கிருதத்துக்கும் உள்ளன. தமிழுக்கு வெறும் 2 இருக்கைகள், போலந்து நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றாகவார்ஸா நகரின் வார்ஸா பல்கலைக் கழகத்தில் இந்திய மொழிகள் துறையில் 47 வருடங்களாகதமிழ் இருக்கை உள்ளது. இதன்அருகிலுள்ள கிராக்கூப் நகரின்கிராக்கூப்யாகி எலோனியன் பல்கலைக் கழகத்தில் 2008 முதல் தமிழ் இருக்கை உள்ளது.
இவற்றுக்கு 7 ஆண்டு களாக பேராசிரியர்கள் அமர்த்தப்பட வில்லை. இச்சூழலில் போலந்தின் 2 தமிழ் இருக்கைகளுக்கும் பேராசிரியர் பணி நியமன அறிவிப்பைஐசிசிஆர் தற்போது வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள் அயல்பணியில் இங்கு பணியாற்ற விண்ணப்பிக்கும் படி கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளித ழிடம் வார்ஸா பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டு பணியாற்றிய பேராசிரியர் கி.நாச்சிமுத்து கூறும்போது, “2013-ல் கடைசியாக கோயம்புத்தூரிலிருந்து சென்ற மொழியியல் துறை பேராசிரியர் ஏதோ சில காரணங்களால் வெறும் 6 மாதங்களில் இந்தியா திரும்பினார்.
அதன் பிறகு 2015, டிசம்பர் 15-ல் கேரளா பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் பி.ஜெயகிருஷ்ணன் தேர்வாகியும் அவரை ஐசிசிஆர் ஏனோ அனுப்பவில்லை. இவ்வாறு 7 ஆண்டுகளாக வார்ஸா தமிழ் இருக்கைகள் காலியாக இருப் பதற்கு மத்திய அரசு தமிழுக்கு எதிரான மனநிலையில் இருப் பதையே காட்டுகிறது” என்றார்.
தொடக்க காலங்களில் இங்கு பணியாற்றும் பேராசிரியருக்கு 3 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி கிடைத்தது. இதில், அவரது குடும்பத்தினருக்கும் தங்குமிடம், உணவு வசதி போலந்து நாட்டால் அளிக்கப்பட்டது. அடுத்து அப்பணிக்காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டு, தற்போது இது வெறும் 9 மாதங்களுக்கு மட்டும் என மாற்றப்பட்டது.
இந்நிலையில் கிராக்கூப் தமிழ் இருக்கைக்கு தனி பேராசிரியரை அனுப்பாமல் வார்ஸா செல்பவரை யே 4 மணி நேர பயணம் செய்து வகுப்பு எடுக்க வைத்த நிலையும் தொடங்கியது. இதுபோன்ற பிரச்சினை, இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மற்ற பாடப்பிரிவுகளில் இல்லை. இதனால் அங்கு பணியாற்ற தமிழ்ப் பேராசிரியர்கள் இடையே நிலவிய ஆர்வம் குறைந்தது. எனவே, அதிக பணி காலத்துடன் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்பது தமிழ்ப் பேராசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT