Published : 27 Mar 2021 05:45 PM
Last Updated : 27 Mar 2021 05:45 PM
முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்க மாநிலத்தில் மாலை 5 மணிநேர நிலவரப்படி 77.99 சதவீத வாக்குகளும், அசாமில் 71.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ;5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அசாமில் 47 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் என 77 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அசாமில் காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் வாக்களிக்கக் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி அசாமில் 71.62% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தற்போது கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் வாக்காளர்கள் முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி வழங்கல், உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மாநில போலீஸாருடன் மத்தியப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்கத்திலும் ஜார்கிராம், மேற்கு மித்னாபூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அதிகஅளவில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மேற்குவங்கத்தில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 77.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT