Last Updated : 27 Mar, 2021 02:04 PM

 

Published : 27 Mar 2021 02:04 PM
Last Updated : 27 Mar 2021 02:04 PM

மேற்குவங்கத்தில் குழப்பம் விளைவித்து வெல்ல வெளியிலிருந்து குண்டர்களை வரவழைக்கிறது பாஜக: தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி புகார்

புதுடெல்லி

தேர்தலில் குழப்பம் விளைவித்து வெல்ல வெளியிலிருந்து குண்டர்களை பாஜக வரவழைப்பதாக மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார்.

இந்த புகார் குறிப்பாக கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட தேர்தலில் பாஜக செய்வதாக எழுந்துள்ளது. இங்குள்ள நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா போட்டியிடுகிறார்.

மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவந்து அதிகாரி போட்டியிடுகிறார். இவரது தலைமையில் அப்பகுதியின் தொகுதிகளில் குண்டர்கள் வரவழைக்கப்படுவதாகப் புகார் கிளம்பியுள்ளது.

மிட்னாபூர் மாவட்டத்தின் காண்டாய் எனும் பகுதியில் மூன்று வெளியாட்களை திரிணமூல் காங்கிரஸினர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடப்பட்டுள்ளனர்.

இதை குறிப்பிட்ட முதல்வர் மம்தா, மத்திய தேர்தல் ஆணையத்திடம் நேற்று புகார் கடிதம் அளித்துள்ளார். இதை மற்ற இடங்களின் தனது பிரச்சார மேடைகளிலும் முதல்வர் மம்தா பேசி வருகிறார்.

இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘இங்கு கள்ள வாக்குகளை பதிக்க வெளியாட்களை பாஜக வரவழைக்கிறது. உத்தரப்பிரதேசத்திலிருந்து சுமார் 30 பேர் இதற்காக வந்திருப்பது தெரிந்துள்ளது.

இவர்களை எதிர்க்க குண்டுகளுக்கு பதிலாகக் குண்டுகளால் சுடுவது நம் அரசியலல்ல. இந்த சூழல் பாஜக தனது தோல்வியை உணரத் துவங்கி விட்டதை காட்டுகிறது’’ எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் இன்று காலை முதல் தொடங்கியுள்ள முதல் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவுகள் தொடர்கின்றன. மேலும் பாக்கியுள்ள ஏழு கட்ட தேர்தலின் முடிவுகள் மே 2 -இல் வெளியாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x