Published : 25 Mar 2021 11:40 AM
Last Updated : 25 Mar 2021 11:40 AM
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றும் எனவும், அதேசமயம் காங்கிரஸ் அணி தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்தும் எனவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக இறங்கியுள்ளன.
தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க போவது யார் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தையக் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மொத்த இடங்கள்: 126
பாஜக கூட்டணி: 65- 73
காங்கிரஸ் கூட்டணி: 52- 60
மற்றவர்கள்: 0-4
இவ்வாறு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT