Published : 25 Mar 2021 10:42 AM
Last Updated : 25 Mar 2021 10:42 AM
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.
இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன. தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க போவது யார் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மொத்த இடங்கள்: 294
திரிணமூல் காங்கிரஸ்: 160
பாஜக : 112
காங்கிரஸ் - இடதுசாரி அணி: 22
மற்றவர்கள்: 0
இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------
யாருக்கு எவ்வளவு வாக்கு?
வாக்கு சதவீதத்தை பொறுத்தவரையில் கட்சிகள் கீழ்கண்டவாறு பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ்: 42.1%
பாஜக : 37.4%
காங்கிரஸ் - இடதுசாரி அணி: 13%
மற்றவர்கள்: 7.5%
------------
முதல்வர் வேட்பாளர்
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு மக்கள்அளித்துள்ள பதில்:
மம்தா பானர்ஜி (திரிணமூல்)- 54.9%
திலிப் கோஷ் (பாஜக) -32.3%
முகுல் ராய் (பாஜக) 6.5%
சுஜான் சக்கரவர்த்தி (சிபிஎம்) 1.3%
சுவேந்து அதிகாரி (பாஜக) – 1.3%
இவ்வாறு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT