Published : 24 Mar 2021 04:15 PM
Last Updated : 24 Mar 2021 04:15 PM

அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி: பாராட்டிய ஐ.நா.சபை: நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

புதுடெல்லி

ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தொற்றும் தன்மை இல்லாத நோய்களினால் இளம் வயதினரிடையே ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பதற்கான இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பாராட்டியுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

— Narendra Modi (@narendramodi) March 24, 2021

“தொற்றும் தன்மை இல்லாத நோய்களைத் தடுப்பதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குமான முன்முயற்சிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. அனைவரும் ஒன்றாக இணைந்து நமது புவியை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x