Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM
ஹைதராபாத்தில் நர்சரி பள்ளி நடத்தி வருபவர் ஷியாமளா (47). இவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் மேலவை உறுப்பினருமான கவிதாவின் உதவியால் கடந்த ஆண்டு கரோனா பரவும் நேரத்தில் தலைமன்னாரில் இருந்து தனுஷ் கோடி வரை கடலில் 30 மைல் தூரத்தைநீந்தி சாதனை செய்ய தயாரானார்.
இலங்கை அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இலங்கை கடற்படையினரின் கண்காணிப் பில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 30 மைல் தூரத்தை ஷியாமளா 13 நேரம் 43 நிமிடத்தில் கடந்தார்.
இதன் மூலம் உலகிலேயே இந்த கடல் பகுதியை நீந்தி கடந்த 2-வது பெண் என்ற பெருமையை பெற்றார் ஷியாமளா. இது குறித்து ஷியாமளா கூறும்போது,’’இலங்கை கடல் பகுதி அமைதியாக இருந்தது. இதனால் சுலபமாக நீந்த முடிந்தது. ஆனால், கடைசி 5 மைல் தூரம் இந்திய கடல் பகுதியில் நீந்துவது பெரும் சவாலாக இருந்தது. முதல்வரின் மகள் கவிதா, ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் திரிபாதி மற்றும் இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே மற்றும் இலங்கை, இந்திய கடற்படை அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்நிலையில் ஷியாமளாவின் சாதனையை பாராட்டி இலங்கை அமைச்சர் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT