Published : 20 Mar 2021 05:02 PM
Last Updated : 20 Mar 2021 05:02 PM
கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கரோனா தொற்று எண்ணக்கை 813 ஆக உயர்ந்துள்ளது. இந்த பாதிப்பு இந்த ஆண்டில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த பிப்ரவரிமுதல் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இதுபோலவே தலைநகர் டெல்லியிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உயர்ந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கரோனா தொற்று எண்ணக்கை 813 ஆக உயர்ந்துள்ளது. இந்த பாதிப்பு இந்த ஆண்டில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.
இதன் மூலம் டெல்லியில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 647161 ஆக அதிகரித்துள்ளது. 24 மணிநேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,955 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3409 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 632797 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 567 பேர் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT