Published : 19 Mar 2021 11:35 PM
Last Updated : 19 Mar 2021 11:35 PM
திடீரென்று ஃபேஸ்பு, வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களாக உள்ள ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம் போன்றவை இன்று (மார்ச் 19) நள்ளிரவு திடீரென செயலிழந்தன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
மொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மட்டுமன்றி கணினியில் இவை செயலிழந்து உள்ளன. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகவில்லை. உலக அளவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் செயல்படாத காரணத்தால், ட்விட்டர் பக்கத்தில் #WhatsappDown, #FacebookDown உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. மேலும், பல்வேறு மீம்ஸ்களும் பகிரப்பட்டு வருகின்றன.
ஒரே சமயத்தில் முன்னணி செயலிகள் மூன்றும் செயலழிந்துவிட்டதால், வாடிக்கையாளர்கள் கடும் தவிப்பில் இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT