Published : 19 Mar 2021 05:12 PM
Last Updated : 19 Mar 2021 05:12 PM

டிஎம்சி என்றால் ‘டெரர், மர்டர் கரப்ஷன்’- புது விளக்கம் கொடுத்த சிவராஜ் சிங் சவுகான்

மிட்னாபூர்

மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ரவுடி ராஜ்யம் நடைபெறுகிறது என மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இருகட்சித்தலைவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் மிட்னாபூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

‘‘மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ரவுடி ராஜ்யம் நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுருக்கமான டிஎம்சி என்றால் ‘டெரர், மர்டர் கரப்ஷன்’ என்று தான் கூற வேண்டும். மே 2-ம் தேதி வாக்கு எண்ணப்படும்போது மேற்குவங்கத்தில் உள்ள ரவுடி கும்பல்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி விடும்.

இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக சரியான பாடம் புகட்டும். மேற்குவங்கத்தில் நடக்கும் காட்டாச்சியை தொடருவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x