Published : 19 Mar 2021 09:53 AM
Last Updated : 19 Mar 2021 09:53 AM
தான் பாஜகவில் சேர மம்தாவின் ஜெய் ஸ்ரீராம் கோஷ எதிர்ப்பே காரணம் எனக் கூறியிருக்கிறார் ராமாயண டிவி தொடர் நடிகர் அருண் கோவில்.
1990-களில் ராமாயண தொடர் பிரபலமாக இருந்தபோது அந்தத் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் நேற்று பாஜகவில் இணைந்தார்.
1990-களில் ராமாயண தொடர் பிரபலமாக இருந்தபோது சீதையாக நடித்த தீபிகா ஏற்கெனவே பாஜகவில் இணைந்து அக்கட்சியின் எம்.பி.யாக இருந்தார். ராவணனாக நடித்த அர்விந்த் திரிவேதியும் பாஜக எம்.பி. ஆனார்.
அதேசமயம் ராமராக நடித்த அருண் கோவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1990-களில் நடந்த தேர்தலில் காங்கிரஸூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்தாலும், நேற்று அவர் பாஜகவில் இணைந்தார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், " ஜெய்ஸ்ரீ ராம் கோஷத்துக்கு மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவரின் இந்த வெறுப்பே என்னை பாஜகவில் இணையத் தூண்டியது.
ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அது ஒன்றும் அரசியல் கோஷம் இல்லையே. அது நம் வாழ்வின் ஓர் அங்கம். நமது கலாச்சாரத்தின் அடையாளம்" எனக் கூறினார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், மேற்குவங்கத்தில் 42 தொகுதிகளில் பாஜக 18 இடங்களைக் கைப்பற்றி அதிர்ச்சியைக் கொடுத்தது. மம்தா இந்து விரோதி என்று கூறி அவருக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை பாஜக பிரபலப்படுத்தியது.
இந்நிலையில், தான் பாஜகவில் சேர மம்தாவின் ஜெய் ஸ்ரீராம் கோஷ எதிர்ப்பே காரணம் எனக் கூறியிருக்கிறார் ராமாயண டிவி தொடர் நடிகர் அருண் கோவில்.
அவருக்கு சீட் கொடுக்காவிட்டாலும் அவரது பிராச்சாரம் பலம் சேர்க்கும் என நம்புகிறது பாஜக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT