Published : 14 Nov 2015 11:25 AM
Last Updated : 14 Nov 2015 11:25 AM
திருப்பதியில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் மையத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பதியில் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் நேற்று காலை ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் மையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி பேசும்போது, “பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீநிவாசம் பக்தர்கள் தங்கும் விடுதியில் ரூ. 300 சிறப்பு தரிசன மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக 3 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தினந்தோறும் 5,000 டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும். முன் பதிவு செய்யாத பக்தர்கள் இந்த மையங்களில் நேரடியாக டிக்கெட் டுகளை பெற்று உடனடியாக சுவாமியை தரிசனம் செய்ய லாம். முதல்வரின் உத்தரவின் பேரில் இத்திட்டம் அமல்படுத் தப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT