Published : 24 Nov 2015 09:12 AM
Last Updated : 24 Nov 2015 09:12 AM
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பாகிஸ்தான் மற்றும் இந்திய நகரங்களிலும் அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தென் மேற்கில் உள்ளது அஷ்காஷம். இந்த இடம் தலைநகர் காபூலில் இருந்து வடகிழக்கில் 300 கி.மீ. தொலைவில் உள்ளது.இங்குள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் 92.4 கி.மீ. ஆழத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 5.9 புள்ளிகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ் தான் தலைநகர் இஸ்லாமாபாத், பெஷாவர் உட்பட பல நகரங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன. அதேபோல், டெல்லி, ஹரியாணா உட்பட வடமாநிலங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT