Published : 16 Mar 2021 06:38 PM
Last Updated : 16 Mar 2021 06:38 PM

2 மக்களவை தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு: 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல்

புதுடெல்லி

2 நாடாளுமன்ற மற்றும் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 17-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாவது:

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி மற்றும் கர்நாடகாவில் பெல்காம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி இந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 17-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும்.

தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 23-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 30-ஆம் தேதி ஆகும். மார்ச் 31 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 3 ஆகும்.

உள்ளூர் திருவிழாக்கள், வாக்காளர்களின் எண்ணிக்கை, வானிலை நிலவரம், பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட விரிவான விதிமுறைகள் தேர்தல் நடவடிக்கைகளின்போது பின்பற்றப்படும்.

கடந்த 2020-ஆம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான அனைத்து அறிவிப்புகளும் இடைத் தேர்தல்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x