Published : 15 Mar 2021 01:12 PM
Last Updated : 15 Mar 2021 01:12 PM

பினராயி விஜயனுக்கு கட்சியை பற்றி மட்டுமே கவலை; கேரளாவை பற்றி கவலை இல்லை: பாலக்காடு தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய ‘மெட்ரோமென்’ ஸ்ரீதரன் சாடல்

பாலக்காடு

கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் பின் தங்கி விட்டது, எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என பாலக்காடு தொகுதி பாஜக வேட்பாளர் ‘மெட்ரோமென்’ ஸ்ரீதரன் கூறினார்.

தலைநகர் டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தி பெரும் புகழ் பெற்றவர் ஸ்ரீதரன். இதுமட்டுமின்றி, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் நிர்வாகியாகவும் இருந்தார். இதனால் அவர் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் என்றே அழைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஸ்ரீதரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாஜக வேட்பாளராக ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் போட்டியிடுகிறார். பாலக்காடு தொகுதியில் அவர் பாஜக வேட்பாளர் அவர் களமிறங்கியுள்ளார். இன்று பிரசாரத்தை தொடங்கிய ஸ்ரீதரன் பேசியதாவது:

‘‘கேரளாவில் கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. முதல்வர் பினராயி விஜயன் முழுக்க முழுக்க தனது கட்சியை வளர்க்கவே கவலைப்படுகிறார். ஆனால் மக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. பல மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் வளர்ச்சி திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. இதனை மாற்ற வேண்டும். கேரளாவை வளர்ந்த மாநிலமாக மாற்ற பாஜகவை மக்கள் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x