Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக பாஜக உள்ளது. இவர்களுக்கு போட்டியாக மூன்றாவது அணியை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் புதிய முஸ்லிம் கட்சியான இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவை அமைத்துள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்கத் தில் இந்தி பேசும் கணிசமான மக்களை குறி வைத்து பிற மாநில கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இதில், பிஹாரில் பாஜகவுடன் இணைந்து ஆளும் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 25 தொகுதிகளில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடு கிறது. மற்றொரு கூட்டணி கட்சி யான இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவும் 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதே மாநிலத்தின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) 294 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் எல்ஜேபி, 63 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.
ஹைதராபாத் எம்.பி.யான அசாதுத்தீன் ஓவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சி, முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இக்கட்சிகள் ஆளும் கட்சியான மம்தாவின் திரிணமூல் காங்கிரஸுக்கு போட்டியாக இருக்கும் எனக் கருதப் படுகிறது. இதனால் இக்கட்சிகளை ‘டோட் கட்வா (வாக்குகளை வெட்டுபவர்கள்)’ என அழைக்கிறார்கள்.
இதுபோல், பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பிரியாமல் இருக்க மகராஷ்டிராவில் காங் கிரஸ், தேசியவாத காங் கிரஸுடன் இணைந்து ஆளும் கூட்டணியான சிவசேனா, போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இவர்களை போலவே, ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இங்கு போட்டியிடவில்லை. இக்கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஜார்கண்டில் ஆட்சி செய்தாலும் அதன் முதல்வர் ஹேமந்த் சோரன் இங்கு மம்தா கட்சிக்கு ஆதரவளித் துள்ளார்.
பிஹாரின் ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) மம்தா விற்கு ஆதரவளித்து மேற்கு வங்கத்தில் போட்டியிடவில்லை. லாலுவின் கட்சியான ஆர்ஜேடி தலைமையிலான பிஹாரின் மெகா கூட்டணியில் காங்கிரஸும், இடது சாரிகளும் இடம் பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட ஆர்ஜேடி மேற்கு வங்கத்தின் ஒரு தொகுதியில் வென்றிருந்தது.
எனினும், அசாமில் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைத் துள்ள கூட்டணியுடன் இணைந்து போட்டியிட ஆர்ஜேடி பேசி வருகிறது. பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியு, அசாமிலும் 25 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. இதனால், பிஹார்வாசிகள் வாழும் பகுதிகளின் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாகப் பிரியும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT