Published : 10 Mar 2021 08:02 PM
Last Updated : 10 Mar 2021 08:02 PM
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவந்த மம்தா பானர்ஜி தன்னை நான்கைந்த பேர் தள்ளிவிட்டதாகத் தெரிவித்தார்.
தனது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.
இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி சிலரால் தள்ளிவிடப்பட்டுள்ளார்.
இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் காரில் ஏற முயன்றபோது என்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டனர். எனது காலைப் பாருங்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல். நிச்சயமாக இதில் சதி இருக்கிறது. என்னைச் சுற்றி திடீரென்று காவலர்கள் யாருமே இல்லை" என்றார்.
முதல்வர் மம்தாவை காரின் பின்பக்க சீட்டில் அவரது மெய்க்காவலர்களை ஏற்றி உட்காரவைக்கும் காட்சி தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது.
நந்திகிராம் தொகுதியில் இன்றிரவு மம்தா தங்கவிருந்த நிலையில் திடீர் தாக்குதலால் அவர் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.
#WATCH West Bengal CM Mamata Banerjee in Nandigram says she has suffered an injury in her leg after few people pushed her when she was near her car pic.twitter.com/D1l00MU7xw
— ANI (@ANI) March 10, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT