Published : 10 Mar 2021 12:16 PM
Last Updated : 10 Mar 2021 12:16 PM
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முக்தார் அப்பாஸ் நக்வி, பிஹார் அமைச்சர் சையது ஷானவாஸ் ஹூசைன் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இவர்களுடன் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா கண்டு ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுளனர்.
முதற்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு:
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பாஜக கூட்டணியில் அசோம் கன பரிஷத் கட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT