Last Updated : 08 Mar, 2021 03:56 AM

 

Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

தொழில் துவங்குவதற்கான உரிமம் எளிதாக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி

தொழில்துறையின் உற்பத்தியை அதிகரிக்க அரசு அறிவித்துள்ள உற்பத்தி சார் ஊக்க சலுகை (பிஎல்ஐ) திட்டம் குறித்த காணொலி கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் சிறிய அளவில் அல்லது பெருநிறுவனங்கள் துவங்கும் தொழிலுக்காக பல உரிமங்கள் பெற வேண்டி உள்ளது. இவை, அப்பகுதி நிர்வாகம், மாநில அரசு மற்றும் மத்திய அரசு என பல எண்ணிக்கையில் தொடரும் நிலை உள்ளது. இதன்மீது இந்திய தேசிய உணவுவிடுதிகள் சங்கம் சார்பில்,எப்.ஒய்20 எனும் பெயரில் ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டது.

அதில், ஒரு உதாரணமாக டெல்லியில் ஒரு உணவு விடுதிதொடங்க, காவல்துறை, தீயணப்புத்துறை, மத்திய, மாநில அரசுகள்உள்ளிட்ட 45 வகையான உரிமங்கள் பெற வேண்டி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைகவனத்தில் கொண்ட பிரதமர்மோடி பேசும்போது, இந்தியாவில் தொழில் துவங்குவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு எளிமைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

‘இந்த பிரச்சினைக்கு அதிகமுக்கியத்துவம் அளித்து தீர்க்கஉள்ளோம். தொழில் துவங்குவதற்காக பல விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முறைவில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்று மோடி தெரிவித்தார்.

கரோனா பரவல் துவங்கிய போது தொழில்துறை பாதிக்காமல்இருக்க மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்திருந்தது. இதில், முக்கியமாக தொழில்துறைக்கு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை உற்பத்திஅடிப்படையிலான ஊக்கச்சலுகை அறிவித்திருந்தது.

இதை படிப்படியாக ஒவ்வொரு தொழில் பிரிவுகளுக் கும் வழங்கி அதன் உற்பத்திகள் அதிகரித்து வருகின்றன. இதில் தொலை தொடர்புத்துறைக்கான உதிரிபாகங்கள் மற்றும் டெலிகாம் இயந்திரங்களின் உற்பத்தி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x