Published : 06 Mar 2021 07:29 PM
Last Updated : 06 Mar 2021 07:29 PM
கோவிட் புதிய பாதிப்புகள் அதிகரிக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை முறையை தொடருமாறு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே பால் ஆகியோர் ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லி, சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண் இயக்குநர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அன்றாட கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த 8 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அன்றாட புதிய பாதிப்புகளும் அதிகரித்து வரும் சூழலில் இங்கு மேற்கொள்ளப்படும் பொது சுகாதார நடவடிக்கைகள், கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
டெல்லியில் 9 மாவட்டங்கள், ஹரியாணாவில் 15, ஆந்திரப் பிரதேசத்தில் 10, ஒடிசாவில் 10, இமாச்சலப் பிரதேசத்தில் 9, உத்தரகாண்டில் 7, கோவாவில் 2 மற்றும் சண்டிகரில் ஒரு மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெருந்தொற்றின் பரவல் அதிகரித்த காலத்தில் பின்பற்றப்பட்ட பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை என்ற சிறந்த வியூகத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மாவட்டங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் தகுதி வாய்ந்தோருக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை செலுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT